பாரத மொழிகளின் திருவிழா

சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் "பாரத மொழிகளின் திருவிழா" என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி தமிழ்த்துறைச் சார்பாக 11.12.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்கள் குத்து விளக்கினை ஏற்றி வைத்து விழாவினைத் துவக்கி வைத்தார்கள்.

முன்னதாக இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியதாவது, " செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமானது நிறைய பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்துகின்றது. அதில் மாணவர்களே நீங்கள் கலந்துக் கொண்டு பயன் பெறுங்கள். வெப்சைட்டில் நிறைய செய்திகள், தரவுகள், புத்தகங்கள், அறிஞர்கள், சான்றோர்கள் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள் வாய்ப்பிருந்தால் தமிழ்த்துறை மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் சென்னை சென்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்று வாருங்கள். தமிழ்மொழியை உங்களைப் போன்ற அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லுங்கள்." என்று உரையாற்றினார்.

பாரத மொழிகளின் திருவிழா என்னும் தலைப்பிலான பேச்சுப்போட்டியில் நடுவர்களாக தடயவியல் துறைத்தலைவர் முனைவர் மு.செந்தில்குமார் அவர்களும், கணினிபயன்பாட்டியல் துறைத்தலைவர் பேரா. M. ராஜகுமார் அவர்களும், கணிதவியல் துறை பேராசிரியை M. வாசுகி அவர்கள் பங்கேற்று தீர்ப்பு வழங்கினார்கள். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

கல்லூரியின் முதன்மையர் பேரா.வ.சந்திர சௌத்ரி அவர்கள் மாணவர்களை வாழ்த்திப் பேசினார்கள். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ.செந்தில்நாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றார்கள்.