News Leter Release 2022
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12.12.2023 அன்று ஒவ்வொரு துறைச் சார்பாக செய்தி மடல் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமை வகித்து துறைத்தலைவர்களிடம் துறையின் செயல்பாடுகள் அடங்கிய செய்தி மடலை வெளியிட்டு துறையை பாராட்டினார்கள்.
தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, கணிதவியல் துறை, இயற்பியல் துறை, வேதியியல் துறை, வணிக மேலாண்மையியல் துறை, வணிகவியல் துறை, கணினி வணிகவியல் துறை, விமான லோண்மைத்துறை, தடயவியல் துறை, கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை, உயிர்த் தொழில் நுட்பவியல் துறை, நுண்ணுயிரியில் துறை, உணவக மேலாண்மைத் துறை, NCC ஆகிய துறைகள் நிகழ்த்திய நிகழ்வுகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, பேராசிரியர்கள் கலந்து கொண்ட கருத்தரங்குகள், பயிலரங்குகள், இதழ்களில் வெளியிட்ட கட்டுரை, புத்தகங்கள் பற்றிய விவரங்கள், மாணவ, மாணவிகளின் கலை மற்றும் விளையாட்டுச் சார்ந்த செயல்பாடுகள், அடங்கிய துறையின் செய்தி மடலை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்கள் வெளியிட அந்தந்த துறையைச் சார்ந்த துறைத் தலைவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
கணிதவியல் துறைப் பேராசிரியை ஆ. வாசுகி அவர்கள் பனைமரத்தின் பயன்பாடுகள் குறித்த கணக்கெடுப்பு பதிப்புரிமையை இந்திய அரசிடம் முன் வைத்தமைக்காக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்கள் வாழ்த்தினார்கள்.
முதலமைச்சரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் என்ற திட்டத்தில் சென்ற கல்வியாண்டின் (2022-2023) இறுதிப் பருவத்தில் 8 முதன்மைப் பெற்ற பெருநிறுவனங்கள் மூலம் 8 பாடப்பிரிவுகள் முறையே நடத்தப் பெற்றன. இவ்வகுப்புகளின் மூலம் இளங்கலை பயிலும் 2718 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு சான்றிதழுடன் பயன் பெற்றார்கள். இதே போல் நடந்து முடிந்த கல்வியாண்டின் (2023-2024) இறுதிப் பருவத்தில் 10 முதன்மைப் பெற்ற பெருநிறுவனங்கள் மூலம் 10 பாடப்பிரிவுகள் முறையே நடத்தப் பெற்றன. இவ்வகுப்புகளின் மூலம் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும் 1800 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு சான்றிதழுடன் பயன் பெற்றார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் (SPOC) தொடர்பாளராக கல்வி முதன்மையர் பேரா. வ.சந்திர சௌத்ரி அவர்களும் கல்லூரி ஒருங்கிணைப்பாளராக ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியாகள் சு. அருள், மு. கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பாக செய்தமைக்காக மாண்பமை வேந்தர் உயர்திரு அ. சீனிவாசன் ஐயா அவர்கள் வாழ்த்தினார்கள்.
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் அவர்களும், கல்வி முதன்மையர் பேராசிரியர் வ.சந்திர சௌத்ரி அவர்களும் உடனிருந்தார்கள்.