Events
தமிழ்த் துறை முப்பெரும் விழா - 2022
மாண்பமை வேந்தருக்கு முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புச் செய்தல்
சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றல்
ஐந்து தமிழ் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளல்
முப்பெரும் விழாவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கல்
தமிழ்த் துறையின் செயல்பாடுகள் - 2012-2016
17.02.2012 அன்று தமிழ்த்துறைச் சார்பில் பைந்தமிழ்ப் பேரவையின் முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை கடம்பவனம் தமிழ் பண்பாட்டுக் கோவில் நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி சித்ரா கணபதி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் “இசைத் தமிழ்,நாடகத்தமிழ் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
17.02.2012 அன்று தமிழ்த்துறைச் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கரு.பழனியப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறியப்பட்ட பழந்தமிழ் மக்களின் வாழ்வியல்’ பற்றி விளக்கினார்.
01.08.2012 அன்று தமிழ்த்துறைச் சார்பில் பைந்தமிழ்ப் பேரவையின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அரியலூரிலுள்ள அரசுகலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சா.சிற்றரசு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கிவைத்தார். அப்பொழுது அவர் “இலக்கியம் என்பது நம்முடைய இதயத்திற்கு மருந்து போன்றது. அதனை அனைவரும் படித்து நோயின்றி வாழ வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
03.08.2012 அன்று தமிழ்த்துறைச் சார்பில் பைந்தமிழ்ப் பேரவையின் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மேஜர் ச.சோமசுந்தரம்,கலைப்புல முதன்மையர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கிவைத்தார். அப்பொழுது அவர் “நினைப்பது முடியும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
08.03.2013 அன்று தமிழ்த்துறைச் சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் முத்தமிழ் விழா நடைபெற்றுது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ்மொழியின் பழஞ்சிறப்பினை எடுத்துரைத்தார்.
22.08.2013 அன்று தமிழ்த்துறைச் சார்பில் நடைபெற்ற விழாவில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு என்.ஆர்.சக்திவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘இலக்கியத்தில் இளைப்பாறு’ என்பது பற்றி எடுத்துரைத்தார்.
13.02.2014 அன்று தமிழ்த்துறைச் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அரு.நாகப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘மொழி உணர்வு’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
24.03.2015 அன்று தமிழ்த்துறைச் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் திட்டக்குடியிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் முதல்வர் உயர்திரு முனைவர் ஆர்.கே.அழகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘இன்றைய தமிழ் மொழியின் நிலை’ பற்றி எடுத்துரைத்தார்.
27.08.2015 அன்று நடைபெற்ற பைந்தமிழ்ப்பேரவையின் தொடக்க விழாவில் தஞ்சை தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கல்லூரியின் இணைப்பேராசிரியர் இலக்கியமாமணி ஆறு.காளிதாசன் அவர்கள் கலந்து கொண்டு ‘மாணவர்கள் தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்களைப் படித்து வாழ்க்கைக்குத் துணையாகப் பின்பற்றவேண்டும்’ என்றார்.
29.03.2016 அன்று தமிழ்த்துறைச் சார்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரம்பலூர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் எழுத்தாளர் பி.தயாளன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
25.07.2016 அன்று அனைத்து துறைகளின் பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவினை தமிழ் துறை ஏற்பாடு செய்தது.சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் உயர்திரு முனைவர் நா.வெற்றி வேலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடம் உரையாற்றினார்.
பைந்தமிழ்ப் பேரவையின் சார்பில் 28.07.2016 அன்று ‘கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திருவையாறு அரசர் கல்லூரி தமிழ்த்துறையின் இணைப்பேராசிரியர் (ஓய்வு) முனைவர் ச.திருஞானசம்பந்தம் அவர்கள் கலந்து கொண்டு கவிமணியின் தமிழ்ப்பற்றினை விளக்கியுரைத்தார்.
தமிழ்த்துறைச் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான “உயர்ந்து நில் உலகை வெல்” என்ற வழிகாட்டி நிகழ்ச்சி 05.10.2016 அன்று நடைபெற்றது. நாமக்கல் அறிஞர்அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியர் அமுத மொழியரசு,நகைச்சுவையரசு டாக்டர். அரசுபரமேசுவரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைப் பற்றி எடுத்துரைத்தார்.
தமிழ்த்துறைச் சார்பில் 06.10.2016 அன்று வள்ளலார் பிறந்த தின விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கான கவிதை,கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பெ.செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறையும் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த் துறையும் இணைந்து மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கவிதை,கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
பைந்தமிழ்ப் பேரவையின் சார்பில் 27.03.2017 அன்று முத்தமிழ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திருவையாறு அரசர் கல்லூரிமேனாள் முதல்வர் முனைவர் பி.தர்மராசு அவர்கள் கலந்து கொண்டு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் சிறப்புக்களை மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
பைந்தமிழ்ப் பேரவையின் சார்பில் 14.09.2017அன்று பேரவை விழா நடைபெற்றது இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கவிஞர் முனைவர் அகவி அவர்கள் கலந்து கொண்டு நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
தமிழ் துறையின் சார்பில் 05.10.2017 அன்று வள்ளலார் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பெரங்கியம் வள்ளலார் மருத்துவமனை சன்மார்க்க சங்க உறுப்பினர் மருத்துவர் சி.வரதராஐன் அவர்கள் கலந்து கொண்டு வள்ளலார் சன்மாக்கம் குறித்து உரையாற்றினார்.